தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது பின்னணி பாடகியாகவும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
கடைசியாக தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் கிளைமேக்ஸ் பைட் காட்சிகளில் தளபதியுடன் சேர்ந்து வில் ஏய்து மாஸ் காட்டினார். கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் எப்படி நடிக்கவும் ஆண்ட்ரியா தயங்கியது இல்லை.
ஆண்ட்ரியாவின் கைவசம் தற்போது அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்கள் உள்ளன. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் 15 நிமிடங்கள் ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா நடித்துள்ளதாக வில்லங்கமான தகவல் வெளியாகியுள்ளது.
இப்படிப்பட்ட காட்சியில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட ஆண்ட்ரியா தன்னுடைய சம்பளத்தில் ஒரு கோடியை ஏற்றியுள்ளார். அதாவது வழக்கமாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடிக்க 50, 60 லட்சம் ரூபாய் தான் சம்பளம் வாங்குவாராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.