Yogi babu
தமிழ் திரையுலகில் தன்னுடைய எதார்த்தமான காமெடி சென்ஸ் மூலம், மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான காமெடி நடிகராக உருவெடுத்தவர் யோகி பாபு. சமீப காலமாக அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் இடம்பெற்று வருகிறது. முன்பெல்லாம் எப்படி முன்னணி நடிகர்களின் படங்களில் வைகை புயல் வடிவேலுவை கமிட் செய்தார்களோ... அதே போல், யோகி பாபுவையும் பல இயக்குனர்கள் கமிட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் இவருக்கும், பார்கவி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு, மிகவும் எளிமையாக திருமணம் நடந்த நிலையில், திருமண வரவேற்பை பிரமாண்டமாக செய்ய யோகி பாபு திட்டமிட்டிருந்தார், ஆனால் அப்போது கொரோனா அதிகம் பரவியதால், முழு ஊரடங்கு போடப்பட்டது எனவே திருமண வரவேற்பும் நடத்தமுடியாத சூழ்நிலை உருவானது.
தீபாவளி திருநாளான இன்று காலை, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி தினத்தில் திருமகளை பெற்றெடுத்த யோகி பாபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.