Thalapathy 66 : தளபதி 66 படத்துக்காக விஜய் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்?

Published : Apr 28, 2022, 10:56 AM IST

Thalapathy 66 : தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

PREV
15
Thalapathy 66 : தளபதி 66 படத்துக்காக விஜய் எடுக்க உள்ள மிகப்பெரிய ரிஸ்க்.... ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்?

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து தளபதி 66 படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கி இருந்தார்.

25

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இயற்கை, லேசா லேசா போன்ற படங்களில் நாயகனாக நடித்த ஷ்யாம் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

35

தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

45

அந்தவகையில் சமீபத்திய தகவல்படி, தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும், சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும் கூட அதில் இடம்பெறும் ஆகஷன் காட்சிகள் வரவேற்பை பெற்றன. 

55

அப்படி இருக்கையில், விஜய்க்கு ஆக்‌ஷன் காட்சியே இல்லாமல் தளபதி 66 படம் உருவானால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என்கிற சந்தேகமும் எழுகிறது. விஜய் எடுக்கும் இந்த ரிஸ்க் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்...  Kaathuvaakula Rendu Kaadhal Review : ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - முழு விமர்சனம்

Read more Photos on
click me!

Recommended Stories