Happy Birthday Samantha Ruth Prabhu : விமர்சனங்களை கடந்து.. 35 -ல் பான் இந்தியா ஸ்டாரான சமந்தா..

Kanmani P   | Asianet News
Published : Apr 28, 2022, 10:46 AM ISTUpdated : Apr 28, 2022, 10:50 AM IST

Happy Birthday Samantha Ruth Prabhu : இன்றைய ஹிட் நாயகிகளில் முன்னணியாக திகழும் சமந்தா.  சந்திக்காத விமர்சனங்களே இல்லையென்று கூறலாம். தனிப்பட்ட வாழ்க்கை முதல் சினிமா வாழ்க்கை வரை பல இடங்களிலும் விமர்சகர்களால் நசுக்கப்பட்டுள்ளார் சமந்தா. 

PREV
111
Happy Birthday Samantha Ruth Prabhu : விமர்சனங்களை கடந்து.. 35 -ல் பான் இந்தியா ஸ்டாரான சமந்தா..
samantha

தெலுங்கு படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான சமந்தா. மிகவும் பௌவ்யமான பெண்ணாக தான் இருந்தார். தமிழில் அதர்வா அறிமுகமான  'பாண காத்தாடி' படம் மூலம் அறிமுகமான சமந்தா அடுத்தடுத்த படங்களிலும் அதே அடக்கத்தை தான் கையாண்டார்.

211
samantha

பின்னர் ராஜமௌலியின் நான்  ஈ இவரை வேறு ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது.   ஈ உடன் இவர் செய்யும் ரோமன்ஸ் உலக சினிமாவிற்கு இவரை அறிமுக செய்த்தது. பின்னர் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

311
samantha

அந்த வகையில் விஜய்க்கு ஜோடியாக தெறி, மெர்சல் என அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை கொள்ளை கொள்ளும் க்யூட் நாயகியாக தோன்றினார். இந்த படங்கள் சமந்தாவிற்கு தமிழ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

411
samantha

பின்னர் திடீரென தனது போக்கை மாற்றிய சமந்தா, விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் புணர்ச்சி இச்சைக்கு அடிமையாகி கணவனுக்கு துரோகம் செய்யும் இளம் பெண்ணாக தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த படம் விமர்சனங்களை தாண்டி சமந்தாவின் நடிப்பிற்காக பாராட்டை பெற்றது.

511
samantha

பின்னர் அமேசான் பிரைம் வீடியோ தொடரான ​​தி ஃபேமிலி மேன் தொடரில் தமிழ் கிளர்ச்சியாளர் ராஜி என்ற பாத்திரத்தில் அவரது துணிச்சலான நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த தொடர் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் சமந்தாவிற்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

611
samantha

முன்னதாக ஓ பேபி படத்தில் இந்திய சினிமாவில் அதிகம் காணப்படாத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அதில்  70 வயது பாட்டி 24 வயதான பெண்ணாக மாறினால் எப்படி இருக்கும் என்னும் கற்பனையை கண்முன் நிறுத்தியிருந்தார் சமந்தா.
 

711
samantha

பின்னர் இவரது கேரியரில் மிக முக்கிய டேர்னிங் பாய்ண்ட் என்றே சொல்லலாம். சமீபத்தில் ஹிட் கொடுத்த புஷ்பா ஐட்டம் சாங். குடும்ப பெண்ணாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமந்தா ஓ..சொல்ட்றியா..ஊஊ  ..சொல்ட்றியா என போட்ட கவர்ச்சி குத்து வேறொரு கோணத்தில் அவரை கொண்டு சென்றது. 

811
samantha

தெலுங்கிலும் அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு கோவில் கோவிலாக சுற்றி வந்தார். ஆனால் திடீரென இவர்களது விவாகரத்து அறிவிப்பு வெளியாகி தென் இந்திய சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

911
samantha

மண வாழ்க்கை முறிவிற்கும் முக்கிய காரணம் சமந்தா என பலரும் விமர்சித்தனர். அதற்கு காரணம் இவர் மிக போல்டாக நடித்திருந்த சூப்பர் டீலக்ஸ், புஷ்பா ஐட்டம் சாங் என காரணங்கள் அடுக்கப்பட்டது. இவற்றையும் கடந்து சென்றார் சமந்தா.

1011
samantha

முன்னதாக புசுபுசு கன்னத்துடன் இருந்த சமந்தா தற்போது உடலையும், மனதையும் இறுக செய்யும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். தன்  சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல சினிமா வாழ்வில் எக்கச்சக்க மாற்றங்களையும் கவர்ச்சியையும் சேர்த்துக்கொண்டார். 

1111
samantha

பாலிவுட்டில் பெரிய படங்களில் நடிக்காமல் உலகம் அறியும் நாயகியான சமந்தாவின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளை முன்னிட்டு 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வெளியாகியுள்ளது. இதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகும் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் கதிஜாவாக வரும் சமந்தா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories