Vijay Speech : திமுகவுடன் கைகோர்த்த விஜய்... எதற்காக தெரியுமா? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

First Published | Jul 3, 2024, 10:50 AM IST

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து போராட்டங்களையும், தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவையும் தாக்கல் செய்தது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் மோசாதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் விஜய், மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு விஜய் பாராட்டு

10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த முறையில் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்வை நடிகரும். தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று இன்று இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

நீட் தேர்விற்கு எதிராக விஜய்

இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட விஜய் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, ஒன்றிய அரசு அமல் படுத்தியுள்ள  நீட் தேர்வு தமிழநாடு மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கபடுவது உண்மை என தெரிவித்தார்.

Tap to resize

மத்திய அரசு டூ ஒன்றிய அரசு

கல்வியை மாநில பட்டியல் இருந்தது ஒன்றிய அரசு பொதுப்பட்டயில் சேர்த்துட்டாங்க. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் கல்விக்கு எதிரானது. மாநிலத்திற்கு ஏற்றார் போல் பாட திட்டம் இருக்க வேண்டும். மாநிலத்தில் படித்து விட்டு தேசிய அளவில் தேர்வு வைத்தால் எப்படி தேர்ச்சி பெற முடியும்,  நீட் தேர்வு மேல் உள்ள நம்பகத்தனைமை போய்விட்டது. இதற்கு என்ன தான் தீர்வு. எனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு மனப்பூர்வமாக வரவேற்கிறேன். 

பொதுப்பட்டியலில் இருந்து நீக்கிடுங்க

எனவே ஒன்றிய அரசு காலதாமகம் செய்யாமல் மக்களை உணர்வுகளை புரிந்து செயல்படவேண்டும்.  பொதுபட்டியல் இருந்து மாநிலப்பட்டியல் இருந்து கொண்டு வரவேண்டும். சிறப்பு பொதுப்பட்டியலில் கல்வி மற்றும் சுகாதாரத்தை சேர்க்க வேண்டும். மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே ஒன்றிய அரசு தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு வேண்டும் என்றால்  நீட் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார். 
 

மத்திய அரசுக்கு எதிர்ப்பு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சின் மூலம் மத்திய அரசு தனது எதிர்ப்பையும், தமிழக அரசுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் திமுக அரசு ஒன்றிய அரசு என கூறி வருகிறது. அதே  போல விஜய்யும் ஒன்றிய அரசு என கூறியுள்ளார்.
 

கை கோர்த்த விஜய்

இதே போல நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடங்கிய எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக பேசிய விஜய் திமுக அரசின் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமில்லாமல் உடனடியாக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என கூறியிருப்பது திமுகவுடன் நடிகர் விஜய் கோர்த்துள்ளதாகவே கூறப்படுகிறது.  

Latest Videos

click me!