வடிவேலு பர்த்டே ஸ்பெஷல்... எப்போ பார்த்தாலும் சிரிக்க தோன்றும் வடிவேலுவின் சில புகைப்படங்களின் தொகுப்பு!!

Published : Sep 12, 2021, 06:30 PM IST

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உச்சம் தொட்ட அனைத்து, காமெடி நடிகர்களுக்கும் தனி திறமைகள் உண்டு. அந்த வகையில்... வடிவேலுவின் பாடி லாங்குவேஜுடன் கூடிய காமெடியை ரசிக்க கண் இரண்டு பத்தாது. இந்நிலையில் இவர் இன்று தன்னுடைய 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, இவரது சில காமெடி காட்சிகளின் அசத்தல் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...  

PREV
111
வடிவேலு பர்த்டே ஸ்பெஷல்... எப்போ பார்த்தாலும் சிரிக்க தோன்றும் வடிவேலுவின் சில புகைப்படங்களின் தொகுப்பு!!

1990ஆம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு வெளிவந்த காமெடி காட்சிகளில் காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. 

211

சுமார் 10 வருடமாக இவரது நடிப்பை சரியாக வெள்ளித்திரையில் பார்க்காத ரசிகர்கள் பலர், இவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கினர். 
 

311

ரசிகர்களின் இந்த 10 வருட காத்திருப்புக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், தற்போது வடிவேலு அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகிவிட்டார்.
 

411

இவர் மீது போட பட்டிருந்த ரெட் கார்டும் நீக்க பட்டுவிட்டதால்... இந்த வருட பிறந்தநாளை வெகு சிறப்பாக படக்குழுவை குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

511

இவரது பிறந்த நாள் ஸ்பெயிஷலாக இவர் நடித்த படங்களில் எப்போது பார்த்தாலும் சிரிக்க தோன்றும் சில புகைப்படங்களை பற்றிய ஸ்பெஷல் தொகுப்பு இதோ

611

மஜா படத்தில், புலியாக நடித்த வடிவேலுவை எலின்னு பெயர் வைத்து விக்ரமும், பசுபதியும் வாங்கிய வேலைகள் கொஞ்சம் நஞ்சமா?

711

'சந்திரமுகி' படத்தில் முருகேசனாக மாறி வடிவேலு செய்த அட்ராசிட்டியை மறக்க முடியுமா? குறிப்பாக ரஜினியுடன் நடித்த ஒவ்வொரு காமெடி காட்சியும் வேற லெவல்.

811

வடிவேலுவின் இம்சை அரசனுக்கு இரண்டாம் பாகம் எடுத்தாலும், அது முதல் பாகம் போல் இருக்குமா? என்பது சந்தேகமே... இரட்டை வேடத்தில் காமெடியிலும் - வீரத்திலும் கெத்து காட்டி இருந்தார்.

911
Vadivelu

பார்த்திபனுக்கு - வடிவேலுக்கு எப்போதுமே காமெடியில் ஸ்ட்ராங் கெமிஸ்ட்ரி தான்... அதிலும் அந்த துபாய் அட்ரஸ் விஷயம் இப்போது வரை பல ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று 

1011

மணிமேகலையோட அண்ண... பொத்தி பொத்தி வளத்தை புள்ள மேகல , இப்ப வரைக்கும் மணிமேகலைனு யார் பேர் வச்சிருந்தாலும் அவங்கள இந்த காமெடியை சொல்லி கிண்டல் பண்ணாதவர்களே கிடையாது.

1111

இந்த நாய் சேகருக்கு கிடைத்த வரவேற்பு தான், இப்போது வடிவேலுவின் இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு படமே உருவாகிறது. இது போல் சொல்லி கொண்டே இருக்கலாம் வடிவேலுவின் காமெடிகளை.

click me!

Recommended Stories