செந்தில் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுன் தொடங்கப்படும் நிலையில் இந்தப் படத்தில் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
செந்தில் இல்லாத படங்களே தமிழ் சினிமாவில் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து காமெடியில் கலக்கியிருப்பார். அவர் மட்டுமின்றி கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகளை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அடி வாங்குவதாக இருந்தாலும் சரி, கேள்வி கேட்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் தனக்கென்று ஒரு ஸ்டைலை கொண்டிருந்தார். ஒரு சில படங்களில் சிந்திக்கவும் வைத்தவர். நம் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட சம்பவங்களை வைத்து தான் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகள் இருக்கும்.
24
முன்னணி நடிகர்களுடன் செந்தில் நடித்த படங்கள்
ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், ராமராஜன் என்று எல்லா மாஸ் ஹீரோக்களின் படங்களிலும் செந்தில் நடித்துள்ளார். செந்திலின் டிரேட் மார்க் படமான கரகாட்டக்காரன் படத்தில் வரும் காமெடி காட்சியை இன்றும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சினிமாவில் கவுண்டமணி செந்தில் இருக்கும் படங்கள் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று சொல்லும் அளவிற்கு அவர்களது காட்சிகள் இருக்கும். இந்த நிலையில் நீண்ட் இடைவெளிக்கு பிறகு சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். பிஸ்தா, டைனோசர்ஸ், கிக், லால் சலாம் போன்ற படங்களில் நடித்திருந்த செந்தில் இப்போது லீடு ரோலில் நடிக்க இருக்கிறார்.
34
செந்தில் நடிக்கும் திரைப்படம்
இதுவரையில் காமெடியனாக பார்க்கப்பட்ட செந்தில் இனிமேல் ஹீரோவாக பார்க்கப்பட இருக்கிறார். சில தினங்களுக்கு கவுண்டமணி நடிப்பில் உருவான ஒத்த ஓட்டு முத்தையா படம் வெளியான நிலையில் இப்போது செந்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில் பிஎம்எஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் முரளி பிரபா தயாரிப்பில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் செந்தில் லீடு ரோலில் நடிக்கிறார்.
44
செந்தில் கூல் சுரேஷ் நடிக்கும் திரைப்படம்
அவருடன் இணைந்து கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக ஆக்ஷ்ன் கமர்ஷியல் ஜானரில் உருவாக இருக்கிறது. அதுவும் ஒரு நாற்காலிக்கு 4 கேங்க்ஸ்டர்கள் போட்டி போடுகிறார்கள். கடைசியில் அந்த நாற்காலியில் அமர போவது யார் என்பது தான் படத்தோட கதை. சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது. படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் கோவாவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.