அடுத்தடுத்த தோல்வியால் சந்தானம் எடுத்த அதிரடி முடிவு... சம்பளத்தை எவ்வளவு குறைச்சிட்டார் தெரியுமா?

First Published Dec 4, 2020, 4:18 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சந்தானம் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து ஹீரோ அளவிற்கு பிரகாசிக்கும் வாய்ப்புகள் எல்லாம் அனைவருக்கும் எளிதாககிடைக்கூடியது அல்ல.
undefined
அப்படி டி.வியில் லெள்ளு சபா, டீ கடை பெஞ்சு, சகளை vs ரகளை போன்ற நையாண்டி ஷோக்கள் மூலமாக கலக்கிக் கொண்டிருந்த சந்தானத்திற்கு 2004ம் ஆண்டு சிம்புவின் மன்மதன் படம் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
undefined
தனது நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் பெயர் போன சந்தானம் படிப்படியாக உயர்ந்து தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார்.
undefined
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 ,ஏ1 போன்ற பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி படங்களாக அமைந்தது.
undefined
ஆனால் அதன் பின்னர் யோகிபாபுவுடன் நடித்த டகால்டி, சமீபத்தில் வெளியான பிஸ்கோத் போன்ற படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய சரிவை சந்தித்தது.
undefined
காமெடி நடிகராக உச்சத்தில் இருந்த சந்தானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் சம்பளம் கொடுக்க காத்திருந்த தயாரிப்பாளர்கள் தற்போது அவரை ஒப்பந்தம் செய்ய முன்வராததால் சந்தானம் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்று வந்த சந்தானம், தற்போது அதை ரூ.2.5 கோடியாக குறைத்துள்ளாராம்.
undefined
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டு வருவதால் சந்தானமும் சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ சந்தானத்தின் இந்த முடிவால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
undefined
click me!