நடிகர் தவசிக்கு குவியும் உதவிகள்... நேரில் சந்தித்து நிதி வழங்கிய ரோபோ சங்கர்...!

First Published | Nov 19, 2020, 4:22 PM IST

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி. பெரிய தாடி, முறுக்கு மீசையுடன் கரத்த குரலில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம்.
தற்போது தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் உதவி கேட்டு மன்றாடினார்.
Tap to resize

உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு ஆகியோர் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி செய்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் 25 ஆயிரமும், சூரி ரூ.20 ஆயிரமும் நிதி வழங்கினர். அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அலுவலகத்தில் இருப்பவர்களிடம், தவசிக்கு தேவையான உதவிகளை செய்யும் படி கூறியுள்ளாராம்.
தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மதுரைக்கே சென்று நேரில் சந்தித்த காமெடி நடிகர் ரோபோ சங்கர், அவர் விரைவில் உடல் நலம் பெறுவார் என ஆறுதல் கூறினார்.
மேலும் தன்னால் ஆனா நிதி உதவியையும் மருத்துவ செலவிற்காக வழங்கினார். அடுத்தடுத்து தவசிக்கு பல்வேறு நடிகர்களும் உதவிக்கரம் கொடுத்து வருவது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Latest Videos

click me!