இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான “பாகுபலி” படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றவர் ராணா.

பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, மே12ம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோசியல் மீடியாவில் போட்டோவுடன் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. மாப்பிள்ளை கெட்டப்பில் ராணாவும், பட்டுப்புடவையில் மிஹீகாவும் சும்மா தகதகவென ஜொலித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.

இதை மறுத்த ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ், எங்களது குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசும் “ரேகா” நிகழ்ச்சி தான் நடைபெற்றுள்ளது. அதற்காக தான் பெண் வீட்டார் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து ராணா - மிஹீகா திருமணம் ஆகஸ்ட் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ராணா - மிஹீகா திருமணம் ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நடைபெற உள்ளது.

மகளின் திருமண ஏற்பாடுகளை பன்ட்டி பஜாஜ் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

ராணாவின் தந்தையான சுரேஷ் தன் மகனின் திருமணத்தை ராமநாயுடு ஸ்டுடியோஸில் நடத்த விரும்பினாராம். ஆனால் அதன் பிறகு இரு வீட்டாரும் சேர்ந்து பேசி தாஜ் ஹோட்டலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட திருமணத்தை இருவீட்டாரும் ஊடகங்கள் கண் முன்பு நடத்த விரும்பவில்லையாம். அதனால் மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அழைக்க உள்ளார்களாம்.

ராணா, மிஹீகாவின் திருமணம் தெலுங்கு மற்றும் மார்வாடி முறைப்படி நடக்குமாம்.

ஆர்யா, சயீஷாவின் திருமணம் தாஜ் ஃபலக்நுமா ஹோட்டலில் தான் பிரமாண்டமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.