அதை நம்ப வேண்டாம்... நடிகர் பசுபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Published : Jul 30, 2021, 08:30 PM IST

தன்னுடைய படங்களில் எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களை சவாலாக எடுத்து நடித்து அசத்தி வரும் பசுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சார்பட்டா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இவர் பெயரில் சில போலி கணக்குகள் உள்ள வர துவங்கியது. இதற்க்கு தன்னுடைய பக்கத்தில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளார்.  

PREV
16
அதை நம்ப வேண்டாம்... நடிகர் பசுபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்..!
Sarpatta Parambarai

'சார்பட்டா' படத்தில் ஆர்யாவுக்கு அடுத்தபடியாக, அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் 'ரங்கன் வாத்தியாராக' நடித்த பசுபதி தான். பா.ரஞ்சித்தின் தேர்வு எப்போதுமே அல்டிமேட் என்பதை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தேர்வும் நிரூபிக்கும் விதமாக அமைந்தது.

26
Sarpatta Parambarai

இவர் நடிப்பில் பல படங்கள் தமிழில் வெளியாகி, அந்த கதாபாத்திரங்கள் பிரபலமாக பேசப்பட்ட போதிலும், 'ரங்கன்' கதாபாத்திரம் படம் பார்ப்பவர்கள் ஓவ்வொருவர் மனதிலும் நிலைத்துவிட்டார். இன்றைய தினம் இதற்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார் பசுபதி.

36
Sarpatta Parambarai

அதில் "தான் எடுத்து கொண்ட கதையை, சொல் நேர்த்தி.. செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் பா.இரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னை செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்,நெருக்கமானவன். நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்து கொள்கிறது.

46

sarpatta parambarai

என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், எந்த சமரசமும் இன்றி இப்படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன் & K9 ஸ்டுடியோவுக்கும் என் நன்றிகள்.ஏறக்குறைய 22 ஆண்டுகள் என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் பயணித்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், சக கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் , ஊடக நண்பர்களுக்கும், சமூக வலை தளங்களுக்கும், குறிப்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற ரசிகர்களுக்கும் நன்றிகள் பல'. எனத் தெரிவித்துள்ளார்.

56
sarpatta paramparai

இந்த படத்தின் இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்ததால், இவருடைய பெயரில் சில போலி சமூக வலைதள பக்கங்களை உருவாகி சில மர்ம நபர்கள் உலாவ விட்டனர். இதனை உண்மை என்று நம்பி பலர் அந்த போலி சமூக வலைதள கணக்குகளை பின்பற்றவும் துவங்கினர்.

66

sarpatta

இதுகுறித்து அறிந்த பசுபதி... தான் எந்த ஒரு சமூக வலைதள பக்கங்களிலும் இல்லை என்றும், தன்னுடைய பெயரில் போலியாக உலா வரும் சமூக வலைதள பக்கங்களை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

click me!

Recommended Stories