தண்ணீர் தொட்டியில் பிரசவம்... நடிகர் நகுல் மனைவியை தாறுமாறாக விமர்சித்தவருக்கு கிடைத்த நெந்தியடி பதில்....!

First Published | Sep 24, 2020, 4:11 PM IST

தனது வாட்டர் பர்த் முறை பிரசவம் குறித்து சோசியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு நடிகர் நகுலின் மனைவி இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

“பாய்ஸ்”,“காதலில் விழுந்தேன்” “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”,“மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தவர் நகுல். பிரபல நடிகை தேவயானியின் தம்பியான இவர், தற்போது உடல் எடையைக் குறைத்து கட்டுமஸ்தான தோற்றத்திற்குமாறியுள்ளார்.
நடிகர் நகுல் கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
Tap to resize

மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் நகுல் - ஸ்ருதி தம்பதினருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளனர்.
பல மருத்துவர்களை கலந்தாலோசித்து அதில் திருப்தி கிடைக்கவில்லை என்றும், தோழி ஒருவரின் அறிவுரையின் படி ஐதராபாத்தில் சாங்டம் பர்த் சென்டரில் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்ல 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை பெற்றதாக குறிப்பிட்ட ஸ்ருதி, இதுபோன்ற மரியாதையான நல்ல பிரசவ முறையை மற்ற பெண்களும் அனுபவிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் நடிகர் நகுல் மனைவி வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதையே ஒரு பாமரன் செய்திருந்தால் இந்த அரசாங்கமும், ஊடகமும் அவர்களை சும்மா விடுமா என கேள்வி எழுப்பியிருந்தார். பல லட்சம் மருத்துவமனைக்கு செலவு செய்து கடுமையான ஊசிகளை போட்டு கொண்டு கடும் மன அழுத்தத்தோடு பிள்ளை பெற்று எடுப்பவர்களை விட நடிகர் நகுல் குடும்பம் எடுத்த முயற்சி சிறந்தது ஒரு மருத்துவரை வைத்துக் கொண்டு வீட்டிலேயே பார்க்கப்படும் பிரசவம் பாதுகாப்பானது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல் மனைவி ஸ்ருதி, ஐதராபாத்தில் உள்ள சாங்கடம் நேச்சுரல் பர்த் சென்டர் என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்றும், தகுந்த மருத்துவ ஆலோசனைகளுக்கு பின்னரே குழந்தை பெற்றதாகவும், சிலர் தவறான செய்திகளை பரப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!