Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தாரிணி யை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் காளிதாஸுக்கும் தாரணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அவர்களுக்கு திரையுலப் பிரபலங்களும் சினிமா ரசிகர்களும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
காளிதாஸ் 7 வயதில் இருந்து நடித்து வருகிறார். மலையாளத்தில் வெளிவந்த ‘கொச்சு கொச்சு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அந்தப் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றார். 2016ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் நடத்து ஹீரோவாக அறிமுகமானார். மீண்டும் பூமரம் என்ற மலையாள படத்திலும் நடித்து அசத்தினார். நவரசா என்ற வெப் சீரீஸில் காளிதாஸ் திருநங்கையாக நடித்தது அவருக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது.
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
சுதா கொங்கரா இயக்கிய பாவக்கதைகள் என்ற சீரிஸிலும் திருநங்கையாக நடித்து தன் திறமையைக் காட்டினார். தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் பெற்றார். நடிப்புடன் திறமையாக மிமிக்ரி செய்வதிலும் தேர்ந்தவர் காளிதாஸ்.
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
இவ்வளவு திறமையுடன் ஸ்மார்ட்டான லுக்கில் ஜொலிக்கும் காளிதாஸுடன் காதலில் விழுந்தால் மாடல் அழகி தாரிணி. இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். 2021ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டார். இதுமட்டுமின்றி பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனுடன் விளம்பரத்தில் நடித்து பிரபலமானவர்.
Kalidas Jayaram Tarini Kalingarayar Engagement
இவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து, தாரிணியும் - காளிதாஸ் திருமண நிச்சயதார்த்தம் பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.