பிரதமர் மோடிக்கு தனுஷ் போட்ட ஒற்றைப் பதிவு... கொதிக்கும் நெட்டிசன்கள்!
இந்நிலையில், பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில், நடிகர் தனுஷும் தனது X தளத்தில் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
‘முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துப் பதிவு வெளியிட்டீர்களா?’ ‘பா.ஜ.க கூட்டணியில் இணையப்போவதைத்தான் மறைமுகமாகத் தெரிவிக்கிறீர்களா?’ முதல்முறையாக பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்களே, இது என்ன புது வழக்கம்? அதேபோல், தனுஷ் பேசிய புகழ்பெற்ற வசன டெம்ப்ளேட்டை வைத்து, ‘ஏன் நாங்களெல்லாம் Birthday Wish பண்ணக் கூடாதா?’ என்று சில நெட்டிசன்கள் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், ‘கடந்த 2020-ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடிக்கு தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்; இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.ஒரேயொரு வாழ்த்துப் பதிவு மூலம் பலதரப்பட்ட விவாதங்களை தனுஷ் கிளப்பியுள்ள நிலையில், இது அவரது தீவிர அரசியல் பயணத்திற்கான அடுத்த கட்ட நகர்வா அல்லது வழக்கமான வாழ்த்து மட்டும்தானா என்பது வரும் காலங்களில்தான் தெரியவரும்.