Dhanush : தனுஷை முதலமைச்சர் ஆக்கத் துடிக்கும் பிரபலம்... அரசியலுக்கு ஓகே சொல்வாரா அசுரன்?

First Published | May 3, 2022, 8:33 AM IST

Dhanush : தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்ட நடிகர் தனுஷ், சமீபத்தில் டோலிவுட்டிலும் அறிமுகமானார். அங்கு இவர் நடிப்பில் தற்போது வாத்தி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இது ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற லீடர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tap to resize

மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதியாக, அதுவும் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் ஏற்கனவே துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். ஆனால் அவர் முதலமைச்சர் வேடத்தில் நடிக்க ஓகே சொல்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்...  மின்சாரம் தாக்கியதால் 4-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் இளம் இயக்குனர் பரிதாப பலி

Latest Videos

click me!