Cheran new look: மண்டை மேல கொண்டை.. கோட் - சூட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சேரன்! ஷாக்கிங் போட்டோஸ்!

Published : Dec 23, 2021, 02:50 PM IST

மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சேரன் (Cheran) தற்போது, வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.

PREV
18
Cheran new look: மண்டை மேல கொண்டை.. கோட் - சூட்டில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சேரன்! ஷாக்கிங் போட்டோஸ்!

ஒரு துணை இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர்... 'புரியாத புதிர்' படத்தின் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து ஒரு நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர் சேரன்.

 

28

இதை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு, நடிகர் பார்த்திபன் - மீனா நடித்த, 'பாரதி கண்ணம்மா' படத்தை இயக்கி, முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை உறுதி செய்தார்.

 

38

தொடர்ந்து 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை இயக்கியது மட்டும் இன்றி, ஹீரோவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

48

ஆட்டோகிராப்' படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

 

58

லாஸ்லியா - சேரனுக்கு இடையே இருந்த அப்பா... மகள்... உறவு பார்பவர்களையே நெகிழ வைத்தது. தற்போது திரைப்படங்கள் இயக்காமல் 'ராஜாவுக்கு செக்' மற்றும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 

68

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள சேரன் தற்போது, இதுவரை இல்லாத அளவிற்கு புதிய கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்.

 

78

அதில் தலையில் நீண்ட முடிகளுடன் உள்ளார். மண்டை மேல ஒரு கொண்டை வைத்து கொண்டு.. வாயில் ஸ்மோக்கிங் பைப் வைத்தபடி படு வித்தியாசமாக உள்ளது இவரது தோற்றம்.

 

 

88

மேலும் கையில் ஸ்க்ரிக், துப்பாக்கி போன்றவற்றையும் வைத்து மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள்? சேரனா இது என செம்ம ஷாக் ஆகிறாரகள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்...

 

click me!

Recommended Stories