Anjana Arjun
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் அர்ஜுன். இவர் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் முதன்முறையாக நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்து நடித்து வருகிறார் அர்ஜுன்.
Anjana Arjun
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தார் அர்ஜுன். பட்டத்து யானை மற்றும் சொல்லிவிடவா ஆகிய திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா. 2 படங்களுமே கைகொடுக்காததால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
Anjana Arjun
அதேபோல் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது சுத்தமாக ஆர்வமில்லையாம். இதனால் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு இருந்த அஞ்சனா, கடந்தாண்டு ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.
இதையும் படியுங்கள்... பேமிலியோடு டென்மார்க்கிற்கு ஜாலி ட்ரிப் சென்ற சூர்யா - ஜோதிகா
Anjana Arjun
அஞ்சனா தொடங்கியுள்ள ஹேண்ட் பேக் நிறுவனத்தில் என்ன ஸ்பெஷல் என்றால், அந்நிறுவனம் தயாரிக்கும் ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் மிருகங்களின் தோள் எதுவும் பயன்படுத்தாமல், பழங்களின் தோள்களை வைத்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Anjana Arjun
உலகிலேயே முதன்முறையாக அஞ்சனா தான் இந்த பிசினஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம். இப்படி பிசினஸில் பிசியாக இருக்கும் அஞ்சனா, தனது கம்பெனி ஹேண்ட் பேக்குகளை புரமோட் செய்யும் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார். அந்த ஹேண்ட் பேக்குகளுடன் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஞ்சனா.