காதலுக்கு கண் இல்லை என்பது, பொதுவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட அனைவருக்குமே சொந்தமான வார்த்தைதான். நிறம், மொழி, வயது என அனைத்தையும் தாண்டிய உணர்வு என காதலை பல கவிஞர்களும் வர்ணித்துள்ளார்.
அதுவும் குறிப்பாக திரை துறையை பொறுத்தவரை, நடிகைகள் குறைந்த வயதுடையவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.
அதே போல், இளம் வயதுடைய நடிகைகள் மற்றும் பெண்கள், தங்களை விட அதிக வயதுடையவர்களை திருமணம் செய்து கொள்வதையும் கேள்விப்படுகிறோம்.
தற்போது, அஜித் நடித்த ’வேதாளம்’ , சமந்தாவின் 10 எண்ணுறதுக்குள்ள உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ராகுல் தேவ் 34 வயது நடிகையை காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராகுல் தேவ் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு சித்தார்த் என்ற மகன் மட்டுமே இருக்கிறார்.
மனைவி மறைந்தபின் பல வருடங்களாக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த ராகுல்தேவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த, மாடல் மற்றும் நடிகையுமான முக்தா கோட்சே என்ற நடிகையை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இந்த கிசுகிசுவிற்கு பதில் அளிக்கவில்லை என்றாலும், இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது, முக்தா கோட்சே இவருடைய காதலை உறுதி செய்ததோடு, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முக்தா கோட்சே தமிழில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய காதல் விரைவில் திருமணத்தில் முடிய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.