புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற 5 தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள்

Published : Jun 11, 2025, 08:46 PM IST

புற்றுநோயை எதிர்த்து போராடி மீண்டு வந்த நடிகர், நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
கௌதமி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கௌதமிக்கு 35 வயதில் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது புற்றுநோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அதிமுகவிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை மீட்கவும் ஒரு அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.

25
மனிஷா கொய்ராலா

பிரபல பாலிவுட் நடிகையான மனிஷா கொய்ராலா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், அந்த சவாலான காலத்தை வெற்றியுடன் கடந்து வந்திருக்கிறார். புற்றுநோயுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து "Healed: How Cancer Gave Me a New Life" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். தற்போது சில படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

35
சோனாலி பிந்த்ரா

‘காதலர் தினம்’ படத்தின் மூலமாக தமிழ் திரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சோனாலி பிந்த்ரா. அதன் பின்னர் தமிழில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்கிற படத்தில் மட்டுமே நடித்திருந்தார். 2018-ல் அவருக்கு மெட்டாஸ்டேட்டிக் வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வகை புற்றுநோய் பாதித்தவர்களை காப்பாற்றுவது கடினம் என்று கூறப்பட்ட நிலையில், புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள அவர், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகிறார்.

45
சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் நடிகராக இருக்கும் சஞ்சய் தற்போது தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 2020 ஆம் ஆண்டு நுரையீரல் புற்றுநோய் (நான்காவது நிலை) இருப்பது கண்டறியப்பட்டது. அவர் கீமோ தெரபி மற்றும் உடற்பயிற்சி மூலம் புற்றுநோயை எதிர்த்து போராடினார். ஆரம்பத்தில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற விரும்பாத அவர், பின்னர் தனது குடும்பத்தினரின் ஆதரவு காரணமாக சிகிச்சையை மேற்கொண்டார். தற்போது முழுமையாக குணமடைந்து படங்களில் நடித்தது வருகிறார்.

55
மம்தா மோகன்தாஸ்

மலையாள நடிகையும், பாடகியுமான மம்தா மோகன் தாஸ் இரண்டு முறை புற்றுநோயை சந்தித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்கிற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் 2013 ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தற்போது விட்டிலோகோ என்கிற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழில் ‘குசேலன்’, ‘குரு என் ஆளு’, ‘சிவப்பதிகாரம்’, ‘தடையறத் தாக்க’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories