ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்களின் டாப் 5 பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது. அதில் எவையெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை தியேட்டரில் மிஸ் செய்துவிட்டால் அதை சிடியில் பார்ப்பதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ஓடிடி தளங்களின் வருகைக்கு பின்னர், அந்த பிரச்சனை இல்லை. ஏனெனில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடியில் வந்துவிடுகின்றன. இதனால், ஓடிடியில் படங்களை பார்ப்போர் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு இருக்கிறது. அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.
24
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள்
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை இந்தி மற்றும் மலையாள படம் தான் பிடித்துள்ளது. அதன்படி முதலிடத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த இந்தி படமான சார்ஜமீன் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படம் 48 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படத்திற்கு 37 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. மூன்றாவது இடத்தை ரோந்த் என்கிற மலையாள படம் பிடித்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் இப்படத்திற்கு 26 லட்சம் வியூஸ் கிடைத்திருக்கிறது.
34
டாப் 5ல் இடம்பிடித்த 2 தமிழ் படங்கள்
இந்த டாப் 5 பட்டியலில் நான்காவது இடத்தில் தனுஷ் நடித்த குபேரா படம் உள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி வெற்றிபெற்ற குபேரா, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில், ஓடிடியிலும் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் 20 லட்சம் பார்வைகளுடன் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அடுத்ததாக இந்த டாப் 5 பட்டியலில் புதுவரவாக வந்த 3 பிஹெச்கே திரைப்படம் இடம்பிடித்துள்ளது. ஸ்ரீகணேஷ் இயக்கிய இப்படம் கடந்த வாரம் தான் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. இப்படத்திற்கு 12 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 வெப் தொடர்கள்
அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் பட்டியலில் Mitti Ek Nayi Pehchaan என்கிற இந்தி வெப் தொடர் 5ம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடர் 16 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. நான்காம் இடத்தில் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ உள்ளது. இதற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் மண்டலா மர்டர்ஸ் என்கிற இந்தி வெப் தொடர் 35 லட்சம் வியூஸ் உடன் 3ம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆன ஹண்டர் சீசன் 2 வெப் தொடர் 36 லட்சம் பார்வைகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ஸ்பெஷல் OPS சீசன் 2 வெப் தொடர் உள்ளது. இதற்கு 49 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது.