அடக்கடவுளே! மூட வேண்டிய கட்டாயத்தில் இத்தனை திரையரங்குகளா?... தியேட்டர் உரிமையாளர்கள் கண்ணீர்...!

பல சிக்கல்களையும் கடந்து 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறந்தாலும், கொரோனா பிரச்சனை காரணமாக மக்கள் கூட்டம் கணிசமான அளவிற்கு குறைந்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை கடந்த 10ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும், தனிமனித இடைவெளி, உடல் வெப்ப நிலை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஏற்கனவே பல படங்கள் ஓடிடி-யில் பேரம் பேசப்பட்டு விட்டதாலும், தயாரிப்பாளர்கள் - தியேட்டர் உரிமையாளர்களிடையேயான கட்டண தகராறு காரணமாக புதிய பட ரிலீஸ் தடைபட்டது.
கடைசி நேரத்தில் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் பிஸ்கோத், இரண்டாம் குத்து படத்தை தவிர பிற படங்கள் புதிதாக ரிலீஸ் செய்யப்படவில்லை.
பல சிக்கல்களையும் கடந்து 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறந்தாலும், கொரோனா பிரச்சனை காரணமாக மக்கள் கூட்டம் கணிசமான அளவிற்கு குறைந்துள்ளதால் தியேட்டர் உரிமையாளர்கள் ரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திரையரங்குகளை பராமரிக்கக்கூட வருமானம் இல்லை என்பதால் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்கள் மூடப்பட உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தவித்து வரும் நிலையில், திறக்காத திரையரங்குகளுக்கும் ரூ.30,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos

click me!