பொதுக்குழுவை கூட்ட ராமதாசுக்கு அதிகாரம்.! ஆனாலும் ஒரு சிக்கல்.? பாமக சட்ட விதிகளில் என்ன இருக்கு.?

Published : Aug 08, 2025, 09:20 AM ISTUpdated : Aug 08, 2025, 09:29 AM IST

பாமகவில் தலைவர் பதவிக்கான அதிகாரப் போட்டியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் தனித்தனி பொதுக்குழு கூட்டங்களை அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ், அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரியுள்ளார்.

PREV
16
பாமகவில் தந்தை - மகன் மோதல்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் உள்ள கட்சி பாமக, பாமகவின் ஆதரவு இருந்தால் தான் வட மாவட்டங்களில் வெற்றி பெற முடியும். அந்த அளவிற்கு சேலம், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் பாமக தேர்தலுக்கு தேர்தல் மாறும் கூட்டணியால் நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருகிறது.

 சொந்த தொகுதியிலேயே பாமக தலைவராக உள்ள அன்புமணி தோல்வியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் தந்தை- மகன் இடையே உட்கட்சி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. அதிகார மோதலால் பாமக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தவித்து வருகிறார்கள்.

26
பாமகவில் அதிகார மோதல்

கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பிய நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் காய் நகர்த்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் பாமகவின் பொதுக்குழுவில் மோதல் வெட்ட வெளிச்சமானது. 

அடுத்தடுத்து இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலால் பாமகவின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ், ஆனால் இதனை ஏற்க மறுத்த அன்புமணி பொதுக்குழுவால் தான் தேர்வு செய்யப்பட்டதாகவும் தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லையென தெரிவித்தார்.

36
பிரிந்து கிடக்கும் பாமக

இதனையடுத்து இரு பிளவாக பாமக பிரிந்துள்ள நிர்வாகிகளும் தனி தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் பாமகவை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி கடிதம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு அறிவிப்பை வெளியிட்டார். 

ராமதாஸ் தரப்பில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போட்டியாக ஒரு வாரத்திற்கு முன்னதாக நாளை அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க ராமதாஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

46
போட்டி பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு

பாமக தலைவராக 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது எனவும் எனவே தலைவராக அன்புமணி இல்லையெனவும் பொதுக்குழுவில் தலைவராக அன்புமணியின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே புதிய தலைவராகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30ஆம் தேதி முதல் அவர் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். மேலும் கடந்த ஜூலை 7ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பு கட்சி தலைவருக்கு மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

56
பாமக சட்ட விதிகளில் கூறுவது என்ன.?

இந்த நிலையில் பாமக சட்ட விதிகளில் பொதுக்குழு கூட்ட யாருக்கு அதிகாரம் என்ற தகவல் இடம்பிடித்துள்ளது. பொதுக்குழுக் கூட்டங்களின் இடைவெளியில் தேவை ஏற்படும் போதெல்லாம் கூடி, கொள்கை முடிவுகள், அமைப்பு முடிவுகளை எடுக்கும். 

கட்சியின் மாநிலப் பொதுக்குழு செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகியவற்றின் கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட்டு அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கூட்டியுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

66
அன்புமணி தான் தலைவர்.?

எனவே இன்றைய வழக்கில் ராமதாசுக்கு ஆதரவாக சட்ட விதிகள் இருந்தாலும் அன்புமணியின் பதவி காலம் முடிந்துவிட்டதாக பொதுக்குழு மட்டுமே முடிவு செய்யமுடியும் என கூறுகிறார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள். பொதுக்குழு மீண்டும் கூடியே தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கும் வகையில் அன்புமணியே தலைவர் என்பதால் பொதுக்குழுவை கூட்ட அன்புமணியும் அவரது ஆதரவாளரான பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளனர். இதனால் சட்ட சிக்கல்களை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும்.,

Read more Photos on
click me!

Recommended Stories