UGC இந்தியாவில் இயங்கி வரும் 32 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. முழு விவரம் உள்ளே.பட்டியலை வெளியிட்டது UGC!
இந்தியாவில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பிப்ரவரி 2026-ல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமாக இயங்கி வரும் 32 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போலி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தையும், எதிர்காலத்தையும் வீணாக்குவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25
போலி பல்கலைக்கழகங்களில் டெல்லி முதலிடம்
யுஜிசி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், இந்தியாவின் தலைநகரான டெல்லி அதிர்ச்சியளிக்கும் வகையில் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 12 நிறுவனங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், வொகேஷனல் பல்கலைக்கழகம், ஆன்மீக பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான பெயர்களில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு, மாணவர்களை ஏமாற்றி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
35
பட்டியலில் இணைந்த புதிய மாநிலங்கள்
டெல்லிக்கு அடுத்தபடியாக உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அதிக அளவில் போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிதாக ஹரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களும் இந்த மோசடி பட்டியலில் இணைந்துள்ளன. புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சில கல்வி நிறுவனங்களும் இதில் அடங்கும்.
இந்த 32 போலி பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் எந்தவொரு கல்விப் பட்டத்திற்கும் எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது என்று யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தப் பட்டங்களை வைத்துக்கொண்டு அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளுக்கோ, அல்லது மேற்கொண்டு உயர்கல்வி பயிலவோ முடியாது. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தின் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பட்டங்களை வழங்க முடியும் என யுஜிசி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
55
சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க பரிந்துரை
மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் இந்த போலி கல்வி நிறுவனங்கள் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுஜிசி மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் உயர்கல்வித் துறை மற்றும் முதன்மைச் செயலாளர்களுக்கு யுஜிசி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, கல்லூரி சேர்க்கைக்கு முன்பாக மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்றதா என்பதை யுஜிசி இணையதளத்தில் சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.