தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பது? தகுதிகள் என்ன? ஊதியம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
தகுதி
உதவி பொதுமேலாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். பொதுமேலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
அசோசியேட் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். அசோசியேட் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.