Scholarship Fund
கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆராய்ச்சி படிப்புகளைத் தொடரும் மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித் தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிமுகப்படுத்தியது.
Scholarship Fund
இந்த திட்டத்தின் படி முழுநேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு 5 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படும். நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Scholarship Fund
தகுதியானவர்கள்
மேலும் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையாக உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியானவர்களாகக் கருதப்பபடுவர்.
திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2023ம் ஆண்டு இத்திட்டத்திற்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.37 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.42 ஆயிரமும் வழங்க நிர்ணயிக்கப்பட்டது.
Scholarship Fund
இத்திட்டத்திற்காக முதல் முறையாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 1,144 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 1,129 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. மேலும் இத்திட்டத்தில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் இது தான். இதன் பின்னர் 2023 - 24, 2024 - 25 என இரு கல்வியாண்டுகளிலும் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை.
Scholarship Fund
பெண்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டத்தைத்திற்காக தகுதியான பலரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.