பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாதம் ரூ.5,500 கிடைக்கும்! இப்பவே அப்ளை பண்ணுங்க!

Published : Oct 12, 2024, 03:32 PM IST

பிரதமரின்  இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் 12 மாதங்களுக்கு நேரடி பணி அனுபவம் கிடைப்பதுடன் மாதம் தோறும் ரூ.5000 உதவித்தொகையும் பெறலாம்.

PREV
16
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாதம் ரூ.5,500 கிடைக்கும்! இப்பவே அப்ளை பண்ணுங்க!
PM Internship Scheme 2024

மத்ததிய கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம், (MCA) பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் 2024 இன் கீழ் பதிவு செய்தவற்கான அவகாசம் இன்று தொடங்கியுள்ளது. இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் pminternship.mca.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.பார்வையிடலாம். 

26
Internship age limit

21 முதல் 24 வயதுக்குட்பட்ட, முழுநேர வேலை செய்யாத மற்றும் முழுநேரக் கல்வியில் ஈடுபடாதவர்கள் இந்த வேலைவாய்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஆன்லைன் அல்லது தொலைதூரக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து படிக்கும் நபர்களும் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

36
Internship eligibility

விண்ணப்பதாரர்கள் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் நிறுவனத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ, பிஃபார்மா போன்ற பட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும்.  

46
Internship period

இன்டர்ன்ஷிப் 12 மாதங்கள் நீடிக்கும். இது வகுப்பறை கல்வி அல்ல. இதில் சேரும் நபர்கள் குறைந்தபட்சம் பாதி நாட்களை பணிச்சூழலில் செலவிட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் உதவித்தொகை விவரங்கள் பற்றி அறிய அதிகாரபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

56
Internship assistance

12 மாத இன்டர்ன்ஷிப்பின்போது மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும், வருகைப் பதிவு, நன்னடத்தை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொருவரும் CSR நிதியில் இருந்து ரூ.500 பெறலாம். பயிற்சிப் பணி புரியும் நபரின் ஆவங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

66
Internship programs 2024

2024-25 பட்ஜெட்டில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், இளைஞர்கள் பல்வேறு தொழில்களில் பணிச்சூழல் குறித்து 12 மாத அனுபவத்தைப் பெறுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories