தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலை கனவுடன் இந்தத் தேர்வுகளை எழுதி வருகின்றனர். 2026-ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை (Annual Planner) சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது பாடத்திட்டம் (Syllabus) குறித்து இணையத்தில் பரவும் தகவல் தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
25
பரவும் வதந்தி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு (2026) டிசம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகத் தேர்வர்கள் இப்போதே முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் குரூப் 4 உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இது ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியது.
35
டிஎன்பிஎஸ்சி விளக்கம்
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி, 2026-ல் நடைபெறவுள்ள குரூப் 1 (Group I), குரூப் 2 (Group II), குரூப் 2ஏ (Group IIA) மற்றும் குரூப் 4 (Group IV) ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2024-ல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பழைய பாடத்திட்டமா அல்லது புதியதா என்ற குழப்பம் தேவையில்லை.
55
இதை நம்பாதீங்க!
சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், வதந்திகளால் கவனத்தைச் சிதறவிடாமல் தேர்வுக்குத் தயாராகுறும் தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு எப்போதும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை மட்டுமே அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.