TN TRB Assistant Professor Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு.. கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Published : Dec 15, 2025, 06:32 PM IST

TRB Assistant Professor உதவிப் பேராசிரியர் பணிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என TRB திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

PREV
15
TRB Assistant Professor முற்றுப்புள்ளி

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

25
2708 காலிப்பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை (எண்.04/2025) கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கான நாள், கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வு முறை ஆகியவை அந்த அறிவிப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

35
விதிமுறை என்ன சொல்கிறது?

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையின் பக்கம் எண் 16 மற்றும் 31-ல், விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் ஒரே ஒரு பாடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. கல்லூரிக் கல்வி ஆணையரகத்தின் வழிகாட்டுதலின்படியே இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

45
TRB-ன் அதிரடி விளக்கம்

இருப்பினும், இந்த விதிமுறையை மீறி சில தேர்வர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களுக்கான வாய்ப்பு குறித்து தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்திருந்தாலும், அந்தத் தேர்வர்கள் அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டுமே இப்போட்டித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

55
தேர்வர்களுக்கு அறிவுரை

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், தாங்கள் எந்தப் பாடத்தில் தேர்வெழுத விரும்புகிறார்களோ, அதில் மட்டுமே கவனம் செலுத்தித் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்டாலும், ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் என்பதைத் தேர்வு வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories