வேலை இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொழில்நுட்பத் துறைக்கு திரும்ப விரும்பும் பெண்களுக்காக ZOHO நிறுவனம் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 5 மாத கால தொழில்நுட்ப பயிற்சி பின்னர் வேலை வழங்கப்படும்.
இன்றைய காலகட்டத்தில் குடும்ப சூழல், குழந்தைகள் பராமரிப்பு, உடல்நலம் உள்ளிட்ட பல காரணங்களால் வேலைவிட்டுப் பிரிந்த பெண்கள் பலர், மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்கள். இப்படிப்பட்ட பெண்களுக்காகவே தற்போது பிரபல ஐடி நிறுவனமான ZOHO ஒரு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. “மறுபடி (MARUPADI)” என்ற இந்த திட்டம், வேலை இழந்த அல்லது இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொழில்நுட்பத் துறையில் கால்பதிக்க விரும்பும் பெண்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
24
முழுமையான தொழில்நுட்ப பயிற்சி
இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால், நேரடியாக வேலை அல்ல, முதலில் முழுமையான தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் பெண்கள் சுமார் 5 மாதங்கள் பயிற்சி பெறுவார்கள். இந்த பயிற்சிக்காலத்தில் தொழில்நுட்ப அறிவு, மென்பொருள் மேம்பாடு, டெக்னிக்கல் ரைட்டிங் போன்ற ஐடி தொடர்பான முக்கிய திறன்கள் கற்றுத் தரப்படும். மேலும் பயிற்சி காலத்திலேயே மாதாந்திர ஸ்டைபெண்ட் வழங்கப்படுவதால், பொருளாதார சுமையும் குறைகிறது.
34
வேலையில் இருப்பவர்கள் வேண்டாம்
இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், தற்போது வேலை இல்லாதவர்களாக இருக்க வேண்டும். முன்பு குறைந்தது 2 ஆண்டுகள் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் போதும். வயது வரம்பு இல்லை என்பதும், டிகிரி, டிப்ளமோ, டிஸ்டன்ஸ் எஜுகேஷன் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதும் பலருக்கு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக உள்ளது. தற்போது வேலையில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்கள்.
பயிற்சி வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, ZOHO நிறுவனத்திலேயே கைநிறைய சம்பளத்துடன் ஐடி வேலை வழங்கப்படும். வீட்டில் இருந்தபடியே கனவாக இருந்த ஐடி வேலை, இந்த திட்டம் மூலம் நிஜமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே வேலை இழந்த பெண்கள், கரியரை மீண்டும் தொடங்க நினைப்பவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.