இந்த ஆட்சேர்ப்பில் Structural Engineering, Applied Mechanics, Geotechnical Engineering, Ocean Engineering, Electronics & Communication Engineering, Computer Science, Information Technology, Artificial Intelligence, Machine Learning உள்ளிட்ட துறைகளில் M.E / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் Intellectual Property Law தொடர்பான முதுநிலை தகுதி பெற்றவர்களுக்கும் ஒரு விஞ்ஞானி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட கட்டமைப்பு பகுப்பாய்வு, நவீன பொருட்கள் ஆய்வு, Structural Health Monitoring, கணினி நிரலாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளத்தை கேட்டா மயக்கமே வந்துடும்
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் SC, ST, OBC, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது. தேர்வு நடைமுறை குறுக்குத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நடைபெறும். தேர்வில் தேர்ச்சி பெறும் விஞ்ஞானிகளுக்கு மாதம் ரூ.1,38,652 வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதி, PF, TA/DA போன்ற பல்வேறு அரசு நலன்களும் கிடைக்கும்.
இவங்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
பெண்கள், SC, ST, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் SERC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://serc.res.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்துடன் பணியாற்றும் அரிய வாய்ப்பாக இந்த SERC சென்னை விஞ்ஞானி ஆட்சேர்ப்பு 2025 அமைந்துள்ளது.