தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் காலியாக உள்ள காவலர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயண சுவாமி கோவில். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான கல்வி தகுதி மற்றும் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.
25
கல்வித் தகுதி
பணியிட விவரம்
கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ‘காவலர்’ (Watchman) மற்றும் ‘துப்புரவுப் பணியாளர்’ உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும்.
35
மாத சம்பளம்
வயது வரம்பு
18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் எவ்வளவு?
'பாரா' காவலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இது தவிர, கோயில் ஊழியர்களுக்கான இதர படிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபால் வழியாகவோ நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
55
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பப் படிவங்களை ஜனவரி 15 முதல் 30 வரை திருக்கோயில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகப் பெறலாம் அல்லது https://hrce.tn.gov.in/ இணையதளத்திலோ விண்ணப்பத்தைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, ஜனவரி 30ம் தேதி மாலை 05:45 மணிக்குள் முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். இணையவழியாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
உறையின் (Cover) மீது பாரா (Watcher) பணிக்கு விண்ணப்பம் என்று தவறாமல் எழுதவும். விண்ணப்பிக்கும் முன், சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் முழுமையாகப் படித்து, தகுதியை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். தேர்வு முடிவுகள் வெளியாகும் காலம் வரை செயலில் உள்ள மின்னஞ்சல் முகவரியையும், அலைபேசி எண்ணையும் பராமரிப்பது கட்டாயமாகும்.