SWAYAM ஐஐடி பாம்பே மற்றும் ஸ்வயம் வழங்கும் இலவச ஆன்லைன் படிப்புகள். AI, அனிமேஷன், ரோபோட்டிக்ஸ் பயில இன்றே விண்ணப்பீயுங்கள் வீட்டிலிருந்தே IIT-ல் இலவசமாக இந்த படிப்புகளைப் படியுங்கள்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்
இந்தியக் கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான 'ஸ்வயம்' (SWAYAM) தளம் மூலம், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் பல்வேறு இலவச ஆன்லைன் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வயது வரம்போ, நிதியோ தடையின்றி அனைவரும் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்புகள், ஐஐடி பாம்பே (IIT Bombay), ஐஐடி கான்பூர் போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
26
SWAYAM மூலம் அனிமேஷன் படிப்பு (Animation)
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) ஒருங்கிணைப்பில் வழங்கப்படும் இந்த 15 வாரப் படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனிமேஷனின் அடிப்படை முதல் மாடலிங் (Modelling), டெக்ஸ்சரிங் (Texturing), லைட்டிங் (Lighting) மற்றும் விஎஃப்எக்ஸ் (VFX) வரை அனைத்துத் துறைகளையும் இது உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் கேமிங் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
36
தினசரி பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு (AI for Daily Productivity)
புளேம் (FLAME) பல்கலைக்கழகம் வழங்கும் இந்தப் படிப்பு, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் அன்றாடப் பணிகளை எப்படி எளிதாக்குவது என்பதைக் கற்றுத்தருகிறது. AI-யின் அடிப்படைகள், ப்ராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt Engineering) மற்றும் பல்வேறு AI கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் இதில் கற்பிக்கப்படும். எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், இந்தப் படிப்பு உங்கள் பணித்திறனை மேம்படுத்த உதவும்.
ஐஐடி பாம்பே (IIT Bombay) வழங்கும் இந்தப் படிப்பில், கணினி நிரலாக்க மொழிகளான சி (C) மற்றும் சி++ (C++) ஆகியவை எளிமையான முறையில் கற்றுத்தரப்படுகின்றன. 20 ஆடியோ-வீடியோ பாடங்கள் மூலம் மாணவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் இதில் சேர்ந்து பயனடையலாம்.
56
ரோபோட்டிக்ஸ் மற்றும் பிளாக்செயின் (Robotics & Blockchain)
ஐஐடி கான்பூர் வழங்கும் 'அட்வான்ஸ்டு ரோபோட்டிக்ஸ்' (Advanced Robotics) படிப்பு, ரோபோ வடிவமைப்பு மற்றும் இயக்கவியல் குறித்த ஆழமான அறிவை வழங்குகிறது. அதேபோல், ஐஐடி காரக்பூர் வழங்கும் பிளாக்செயின் (Blockchain) படிப்பில், கிரிப்டோகிராபி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பங்கள் குறித்துக் கற்றுக்கொள்ளலாம்.
66
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing)
ஐஐடி காரக்பூர் பேராசிரியர் சௌமியா காந்தி கோஷ் நடத்தும் இந்தப் படிப்பு, 12 வாரங்களைக் கொண்டது. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு ஏற்ற இப்பாடத்தில், கிளவுட் ஆர்கிடெக்சர் (Cloud Architecture), டேட்டா மேனேஜ்மென்ட் மற்றும் கிளவுட் செக்யூரிட்டி (Cloud Security) போன்ற முக்கியத் தலைப்புகள் விவரிக்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் swayam.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். ஜனவரி 19 முதல் இதற்கான பதிவுகள் தொடங்கியுள்ளன. படிப்புகள் இலவசம் என்றாலும், சான்றிதழ் தேவைப்படுபவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தித் தேர்வெழுத வேண்டும்.