சிபிஎஸ்இ தேர்வில் 90% க்கு மேல மார்க் எடுக்கணுமா? இந்த டிரிக்ஸை பாலோ பண்ணுங்க!

Published : Jan 19, 2026, 07:12 PM IST

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் 90% மேல் மதிப்பெண் பெற, கடின உழைப்புடன் சரியான திட்டமிடலும் அவசியம். தவறுகளைக் குறித்தல், அனைத்துப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளித்தல், தேர்வு எழுதும் முறைகள் போன்ற டிப்ஸ்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

PREV
15
சிபிஎஸ்இ தேர்வு டிப்ஸ்

சிபிஎஸ்இ (CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்குகின்றன. தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவது என்பது கடின உழைப்பால் மட்டுமல்ல, சரியான திட்டமிடலாலும் மட்டுமே சாத்தியம்.

மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவும் சில முக்கிய டிப்ஸ் இதோ!

25
தவறுகளை குறிக்க தனி நோட்டு

பயிற்சித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் தேர்வுகளில் நீங்கள் செய்யும் தவறுகளைத் தனியாக ஒரு நோட்டில் குறித்து வையுங்கள். தேர்வுக்கு முன் இவற்றைத் தொடர்ந்து திருப்புதல் செய்வதன் மூலம், அதே தவறு பொதுத்தேர்வில் மீண்டும் நடக்காமல் தடுக்கலாம்.

35
எல்லா பாடங்களும் முக்கியம்

சிபிஎஸ்இ தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் வெயிட்டேஜ் (Weightage) மாறக்கூடும். எனவே, முக்கியமான பாடங்களுக்குக் கூடுதல் கவனம் செலுத்தினாலும், எந்த ஒரு பாடத்தையும் முழுமையாகத் தவிர்க்க வேண்டாம். அனைத்துப் பாடங்களையும் படிப்பதே பாதுகாப்பானது.

45
மனப்பாடம் செய்ய வேண்டாம்

பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, அதன் அடிப்படைக் கருத்துக்களைப் (Concepts) புரிந்து கொள்ளுங்கள். ஆசிரியர்கள் கொடுத்த குறிப்புகளைப் படிப்பதுடன், கடந்த கால வினாத்தாள்களைத் தீர்த்துப் பாருங்கள். குறைந்தது 3 முதல் 4 முழு மாதிரித் தேர்வுகளை எழுதி, ஆசிரியர்களிடம் காட்டி உங்கள் பலவீனத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

55
தேர்வு எழுதும்போது கவனிக்க வேண்டியவை

• தரமான படிப்பு: நீண்ட நேரம் உட்கார்ந்து படிப்பதை விட, குறைவான நேரமே படித்தாலும் முழு கவனத்துடன் படிப்பதே சிறந்தது.

• MCQ (ஒரு மதிப்பெண் வினா): விடை எழுதும்போது வினா எண், நீங்கள் தேர்ந்தெடுத்த ஆப்ஷன் (Option) மற்றும் அதற்கான வாக்கியம் ஆகிய மூன்றையும் தெளிவாக எழுதவும்.

• விளக்கமான விடைகள்: கணக்குகள் அல்லது அறிவியல் விடைகளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் (Data), சூத்திரங்கள் (Formulas) மற்றும் அதற்கான படிநிலைகளை (Steps) வரிசையாக எழுதவும்.

• படங்கள்: வரைபடங்கள் மற்றும் கட்டுமானங்களை (Constructions) பென்சில் கொண்டு தெளிவாக வரையவும்.

• அடித்தல் திருத்தல்: தவறு நேர்ந்தால் ஒரு கோடு போட்டு மட்டும் அடிங்கள்; கிறுக்கவோ அல்லது வட்டம் போடவோ வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories