CUET PG 2026 : கவலை வேண்டாம்! விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது - உடனே விரையுங்கள்!

Published : Jan 20, 2026, 05:46 PM IST

CUET PG CUET PG 2026 விண்ணப்ப தேதி ஜனவரி 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருத்த தேதி மற்றும் விண்ணப்பிக்கும் முறையை இங்கே அறியுங்கள்.- உடனே விரையுங்கள்!

PREV
15
CUET PG

இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை (PG) படிப்புகளில் சேர்வதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET PG 2026) விண்ணப்பப் பதிவுக்கான காலக்கெடுவை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) மீண்டும் நீட்டித்துள்ளது. இது மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு நல்வாய்ப்பாகும்.

25
காலக்கெடு நீட்டிப்பு விவரங்கள்

முன்பு ஜனவரி 20 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவர்கள் ஜனவரி 23, 2026 இரவு 11:50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என NTA அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசி நாள் ஜனவரி 25 ஆகும். வெற்றிகரமாகப் பதிவு செய்த பிறகு, உறுதிப்படுத்தல் பக்கத்தைப் (Confirmation Page) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.

35
திருத்தங்களுக்கான வாய்ப்பு (Correction Window)

விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதைத் திருத்துவதற்கான ‘கரெக்ஷன் விண்டோ’ (Correction Window) ஜனவரி 28 அன்று திறக்கப்படும். மாணவர்கள் ஜனவரி 30 இரவு 11:50 மணி வரை தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தேர்வு முறையிலோ அல்லது பாடங்களின் பட்டியலிலோ எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 157 பாடங்களுக்குத் தேர்வுகள் நடைபெறும்.

45
தேர்வு மையங்களில் மாற்றம்

CUET PG 2026 தேர்வு மையங்களின் பட்டியலை NTA திருத்தியமைத்துள்ளது. மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 312-லிருந்து 292-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 272 நகரங்களிலும், வெளிநாடுகளில் 16 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நிரந்தர அல்லது தற்போதைய வசிப்பிடம் உள்ள மாநிலத்தில் அதிகபட்சம் நான்கு தேர்வு மையங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

55
விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக விண்ணப்பிக்கலாம்:

1. அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.nic.in/cuet-pg -க்குச் செல்லவும்.

2. முகப்புப்பக்கத்தில் உள்ள CUET பதிவிற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. பெயர், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.

4. பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுையவும்.

5. விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

6. கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

7. எதிர்காலத் தேவைக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

Read more Photos on
click me!

Recommended Stories