சவுத் இந்தியன் வங்கியில் ஆபீசர் வேலை.. கைநிறைய சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Jan 08, 2026, 08:51 PM IST

சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank) அதிகாரி நிலை வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. கிரெடிட் அனலிஸ்ட், டெக்னிக்கல் மேனேஜர், மற்றும் ரிஸ்க் கண்ட்ரோல் யூனிட் போன்ற பல்வேறு சிறப்புத் துறைகளில் குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PREV
14
சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு

வங்கித் துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி! சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு சிறப்புத் துறைகளில் அதிகாரி நிலை (Officer Level) பணியிடங்களை நிரப்பத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

24
பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

இந்த ஆட்சேர்ப்பு முக்கியமாகப் பணி அனுபவம் உள்ளவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது (SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு).

• Credit Analyst: CA, CMA, MBA (Finance) முடித்திருக்க வேண்டும் அல்லது வங்கித் துறையில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

• Technical Manager: சிவில் இன்ஜினியரிங் (Civil Engineering) அல்லது ஆர்க்கிடெக்சர் (Architecture) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

• Risk Control Unit (Lead Analyst): தடய அறிவியல் (Forensic Science) பின்னணி அல்லது ரிஸ்க் மற்றும் மோசடி தடுப்புத் துறையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட பணி அனுபவம் அவசியமாகும். மேலும், இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

34
தேர்வு மற்றும் சம்பளம்

விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் ஸ்கேல் I அல்லது ஸ்கேல் II அதிகாரிகளாக இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படலாம்.

இவர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) விதிகளின்படி கைநிறைய சம்பளமும், இதர படிகளும் வழங்கப்படும்.

44
விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் சவுத் இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான southindianbank.bank.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் போது சமீபத்திய புகைப்படம், கையெழுத்து மற்றும் ரெஸ்யூம் (Resume) ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 17, 2026.

Read more Photos on
click me!

Recommended Stories