பொங்கல் விடுமுறை 2026: பள்ளி, கல்லூரிகளுக்கு இத்தனை நாட்கள் லீவா? குஷியில் மாணவர்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Published : Jan 08, 2026, 06:30 PM IST

Pongal Holidays 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாட்கள் விவரம். போகி மற்றும் மழை விடுமுறை குறித்த தகவல்கள் உள்ளே.

PREV
15
Holidays ஜனவரி மாதம் என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான்!

புத்தாண்டின் தொடக்கமே மாணவர்களுக்கு எப்போதும் உற்சாகம் தான். காரணம், ஜனவரி மாதத்தில் தான் அதிகப்படியான அரசு விடுமுறை நாட்கள் வரிசைகட்டி வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து பள்ளிக்குத் திரும்பிய கையோடு, தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் பண்டிகை வரவுள்ளது. அதைத் தொடர்ந்து குடியரசு தின விழாவும் கொண்டாடப்பட உள்ளது. 2026-ம் ஆண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற முழுமையான பட்டியலைக் கீழே காண்போம்.

25
அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் 2026

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் மொத்தம் 5 முக்கிய அரசு விடுமுறை நாட்கள் உள்ளன.

• ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு (முடிவடைந்தது)

• ஜனவரி 15 (வியாழன்): பொங்கல் திருநாள்

• ஜனவரி 16 (வெள்ளி): மாட்டுப் பொங்கல் / திருவள்ளுவர் தினம்

• ஜனவரி 17 (சனி): காணும் பொங்கல் / உழவர் தினம்

• ஜனவரி 26 (திங்கள்): குடியரசு தினம்

35
தொடர்ச்சியாக 4 நாட்கள் லீவ்.. மாணவர்கள் ஹேப்பி!

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இந்த முறை ஜனவரி 15 (வியாழன்) முதல் ஜனவரி 17 (சனி) வரை அரசு விடுமுறை உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்து ஜனவரி 5-ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு நீண்ட விடுமுறை கிடைப்பது மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

45
போகி பண்டிகையுடன் சேர்த்தால் 5 நாட்கள் விடுமுறை?

அரசு விடுமுறை பட்டியலில் போகி பண்டிகை (ஜனவரி 14 - புதன்) இடம்பெறாது என்றாலும், பலரும் பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக அன்றைய தினமே விடுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு திட்டமிடுபவர்களுக்குப் புதன் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும். சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

55
ஊர் போறவங்களுக்கு ஒரு முக்கிய அலர்ட்!

சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க ஜனவரி 10-ம் தேதியே பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். ஜனவரி 10 (சனி) முதல் 18 வரை விடுப்பு எடுத்துச் செல்பவர்களுக்கு மொத்தம் 9 நாட்கள் வரை ஓய்வு கிடைக்கும். கூட்ட நெரிசலைச் சமாளிக்க அரசு தரப்பில் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், முன்கூட்டியே திட்டமிடுவது சிறந்தது. ஜனவரி 19 (திங்கட்கிழமை) பயணம் செய்பவர்களின் வசதிக்காகக் கூடுதல் விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.

Read more Photos on
click me!

Recommended Stories