ஐ.டி.ஐ , டிப்ளமோ படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: தமிழக அரசு மூலம் விண்ணப்பிக்கலாம்!

Published : Apr 23, 2025, 09:42 PM IST

சார்ஜாவில் டெக்னீசியன்களுக்கு வேலை வாய்ப்பு! தமிழக அரசு அறிவிப்பு. நல்ல சம்பளம் மற்றும் தங்குமிட வசதியுடன். ஏப்ரல் 25-க்குள் விண்ணப்பிக்கவும்!  

PREV
15
ஐ.டி.ஐ , டிப்ளமோ படித்தவர்களுக்கு வெளிநாட்டில்  வேலைவாய்ப்பு: தமிழக அரசு மூலம் விண்ணப்பிக்கலாம்!

வெளிநாட்டில் வேலை தேடும் டெக்னீசியன்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் பணியாற்ற பல்வேறு தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது.
 

25

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஸ்டீல் ஸ்ட்ரக்சுரல் ஃபேப்ரிகேட்டர், சிஎன்சி லேசர் கட்டிங் மெஷின் புரோகிராமர் மற்றும் ஆபரேட்டர், போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆபரேட்டர், பிரெஸ் டால் மற்றும் ஷீட் மெட்டல் டை மேக்கர், மார்க்கெட்டிங் இன்ஜினீயர், புரொடக்சன் இன்ஜினீயர் மற்றும் ஏசி டெக்னீசியன் போன்ற பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 

35
job

இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் டிஎம்இ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 6 வருட பணி அனுபவம் கட்டாயம். விண்ணப்பதாரர்களின் வயது 28 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

45
Job Opportunity

விசா கிடைத்த பிறகு, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.35,400 செலுத்த வேண்டும். தகுதியுள்ள ஆண்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றை ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

55
Recruitment announced for these post

இந்த வேலைவாய்ப்புகளுக்கான நேர்காணல் வரும் மே மாதம் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். கூடுதல் தகவல்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும், சந்தேகங்களுக்கு 95662 39685 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
 

ஜாக்கிரதை பாஸ்! ஜெனரேட்டிவ் AI-யை வெச்சு வேலை தேடுறீங்களா? உங்க கேரியரே காலி ஆகிடும்!

Read more Photos on
click me!

Recommended Stories