TANCET 2025 தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
மாணவர்கள் தங்கள் TANCET 2025 தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பதற்கும், மதிப்பெண் அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கும் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம்:
1. tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. முகப்பு பக்கத்தில், 'TANCET 2025 Results' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3. உள்நுழைவு பக்கத்தில், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
4. உங்கள் TANCET 2025 தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
5. உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கவும்.