Published : Aug 06, 2025, 09:40 AM ISTUpdated : Aug 06, 2025, 10:14 AM IST
தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹25 லட்சம் வரை குழுக்கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 7% வட்டியில் 3 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் வகையில் இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலும் மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நிதி உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. எனவே மகளிர் சுய உதவிக்குழு மூலம் பெண்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ள கடன் உதவி வழங்கப்படுகிறது.
இதன் படி சரியான முறையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் கடன் உதவி, மானிய உதவி, கடன் தள்ளுபடி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தனி நபர் கடன் உதவி திட்டம், குழு கடன் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகிறது. தற்போது 25 லட்சம் ரூபாய் கடன் வழங்கிடும் வகையில் குழு கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
25
குறைவான வட்டியில் 25 லட்சம் கடன்
தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) 25 லட்சம் ரூபாய் வரை குழுக்கடன் திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்த கடன் உதவியானது சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது. இதில் குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூ. 1,25 லட்சம் வழங்கப்படுகிறது.
35
கடனுக்கான வட்டி விகிதம்- திரும்ப செலுத்த காலம்
குழுக்கடன் திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் எனவும், கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும் இடம்பெற வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடன் உதவி பெற குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.