SBI PO Recruitment 2026: மாதம் ரூ.41,960 சம்பளத்தில் எஸ்பிஐயில் காத்திருக்கும் 1,500 வேலைகள்.. உடனே அப்ளை பண்ணுங்க

Published : Jun 19, 2026, 01:25 PM IST

SBI PO Recruitment 2026: அரசு வங்கி வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி செய்தி. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) நாடு முழுவதும் 1,500 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

PREV
14
1,500 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்கள்

அரசு வங்கி வேலைக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவிக்காக நாடு முழுவதும் 1,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

24
சம்பளம், வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி

இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.41,960 தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படும். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் பருவத்தில் பணியாற்றிய பிறகு, செயல்திறன் அடிப்படையில் ஜூனியர் மேனேஜ்மென்ட் ஸ்கேல்-1 பதவி உயர்வு கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு மாணவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

34
தேர்வு முறை மற்றும் விண்ணப்பக் கட்டணம்

இந்த ஆட்சேர்ப்பில் முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சைக்கோமெட்ரிக் மதிப்பீடு, குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் என பல கட்டங்கள் இடம்பெறும். ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி பெறுபவர்களே அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

44
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியது

கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டம், ஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம். அரசு வங்கியில் அதிகாரி பதவியை இலக்காகக் கொண்டிருப்பவர்களுக்கு இது தவறவிடக் கூடாத ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories