இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) நாடு முழுவதும் 26 விளையாட்டுப் பிரிவுகளில் 323 உதவி பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 33% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI), நாடு முழுவதும் உள்ள தனது சிறந்த பயிற்சி மையங்களில் (COE) காலியாக உள்ள 323 உதவி பயிற்சியாளர் (Assistant Coaches) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடகளம், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல் மற்றும் மல்யுத்தம் உள்ளிட்ட 26 விளையாட்டுப் பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
25
முக்கிய அம்சங்கள்
• பெண்களுக்கு முன்னுரிமை: மொத்தமுள்ள 323 இடங்களில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
• அதிகப்படியான காலியிடங்கள்: தடகளம் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய பிரிவுகளில் தலா 28 இடங்களும், நீச்சலில் 26 இடங்களும், மல்யுத்தத்தில் 22 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர குத்துச்சண்டை (19), பளுதூக்குதல், வில்வித்தை, பேட்மிண்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன.
35
தேர்வு செய்யப்படும் முறை
இந்தத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்:
1. கணினி வழித் தேர்வு (CBT): ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த எழுத்துத் தேர்வுக்கு 40 சதவீத முக்கியத்துவம் (Weightage) வழங்கப்படும்.
2. பயிற்சித் திறன் தேர்வு (CAT): பயிற்சியாளருக்கான திறமையைச் சோதிக்கும் இந்தத் தேர்வுக்கு 60 சதவீத முக்கியத்துவம் வழங்கப்படும்.
• எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 1:3 என்ற விகிதத்தில் (ஒரு இடத்திற்கு மூவர்) திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
• வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தது 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
• கல்வித் தகுதி: பாட்டியாலாவில் உள்ள SAI NS-NIS அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயிற்சியாளர் பிரிவில் டிப்ளமோ (Diploma in Coaching) முடித்திருக்க வேண்டும்.
• சிறப்புத் தகுதி: ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுகள் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று, பயிற்சியாளர் சான்றிதழ் படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். துரோணாச்சார்யா விருது பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதி உண்டு.
55
தேர்வு மையங்கள்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரம் அல்லது பெங்களூரு மையங்களில் தேர்வு எழுதலாம். இது தவிர டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தேர்வுகள் நடைபெறும்.