ரிசர்வ் வங்கியில் வேலை! 10-வது படிச்சிருந்தா போதும்.. அப்ளை பண்ண ரெடியா?

Published : Jan 18, 2026, 04:23 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் பிப்ரவரி 4, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

PREV
14
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 572 அலுவலக உதவியாளர் (Office Attendant) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

24
கல்வி மற்றும் வயது தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10-ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வட்டார மொழியை (உதாரணமாக தமிழகத்தில் தமிழ்) நன்றாகப் பேச, எழுத மற்றும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

34
விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, ஓபிசி (OBC) மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) பிரிவினருக்கு 450 ரூபாயுடன் ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படும். எஸ்சி (SC), எஸ்டி (ST), மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 ரூபாயுடன் ஜிஎஸ்டி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு (LPT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைன் தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் கணக்குத் திறன் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த மாநிலத்தின் வட்டார மொழித் திறன் குறித்து ஆய்வு செய்யப்படும்.

44
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

விருப்பமுள்ளவர்கள் rbi.org.in என்ற இணையதளத்திற்குச் சென்று 'Recruitment for the post of Office Attendant - Panel Year 2025' என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கவும், கட்டணம் செலுத்தவும் பிப்ரவரி 4, 2026 கடைசி நாளாகும். இதற்கான ஆன்லைன் தேர்வுகள் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1, 2026 ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories