ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Nov 26, 2025, 05:41 PM IST

RITES Recruitment RITES நிறுவனத்தில் 400 அசிஸ்டென்ட் மேனேஜர் காலியிடங்கள்! பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.42,478. முழு விவரம் உள்ளே.

PREV
16
RITES Recruitment பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! RITES நிறுவனத்தில் 400 காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை' (RITES Ltd) நிறுவனத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் செயல்படும் இந்நிறுவனத்தில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

26
காலியிடங்கள் மற்றும் பதவி விவரம்

RITES நிறுவனத்தில் 'Assistant Manager' (உதவி மேலாளர்) பதவியில் மொத்தம் 400 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணியாகவும், அதிக எண்ணிக்கையிலான காலியிடங்களாகவும் இருப்பதால், இது பொறியியல் பட்டதாரிகளுக்குக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

36
கல்வித் தகுதி என்ன?

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.Tech (Engineering) பட்டம் பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு B.Pharm படித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

46
மாத சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் உதவி மேலாளர்களுக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.42,478/- சம்பளம் வழங்கப்படும். இதுதவிர, பணி நிரந்தரம் மற்றும் பதவி உயர்வு குறித்த விவரங்கள் நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டது.

56
வயது வரம்பு விவரம்

விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு:

• SC / ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள் தளர்வு.

• OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு.

• மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD): 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

• General / OBC பிரிவினர்: ரூ.600/-

• EWS / SC / ST / PWD பிரிவினர்: ரூ.300/-

66
தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான பணியாளர்கள் மூன்று கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்:

1. Written Test (எழுத்துத் தேர்வு)

2. Interview (நேர்காணல்)

3. Document Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்

இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

• விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 26.11.2025

• விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2025

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் RITES நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையளமான https://www.rites.com/ என்ற தளத்திற்குச் சென்று 'Career' பிரிவில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories