Job Offer: 8th,12th முடித்தோருக்கு உள்ளூரில் அரசு வேலை.! தினசரி பேட்டாவுடன் கைநிறைய சம்பளம் காத்திருக்கு.!

Published : Nov 26, 2025, 07:21 AM IST

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 240 தற்காலிக பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. பருவகால உதவுபவர் மற்றும் காவலர் பணிகளுக்கு 8ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நவம்பர் 28 ஆம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

PREV
13
நெல் கொள்முதல் பணிக்கு ஆட்கள் தேவை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை சேர்க்கும் என அறிவித்துள்ளது. அரசு துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. மொத்தம் 240 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பருவகால உதவுபவர் பணிக்கு 120 இடங்களும், பருவகால காவலர் பணிக்கு 120 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. உதவுபவர் பணிக்கு ஆண்கள், பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்; காவலர் பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

23
வயது வரம்பு பிரிவினை பொறுத்து வேறுபடும்

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள், பிசி மற்றும் எம்பிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 34 வயதிற்குள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளமாக ரூ.5,218 அடிப்படை ஊதியம், ரூ.3,499 அகவிலைப்படி ஆகியவை வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு பணி நாளுக்கும் ரூ.100 போக்குவரத்துக்கட்டணமும் வழங்கப்படும்.

33
கல்வித்தகுதி இதுதான்

கல்வித்தகுதியாக காவலர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி, உதவுபவர் பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தகுதியானவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் தஞ்சாவூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை நவம்பர் 28 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories