தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனம் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) தொழில் பழகுநர் (Apprentices) பயிற்சி பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தம் 99 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருப்பமுடையவர்கள் 05.12.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Graduate Apprentices – 29 இடங்கள்
Mechanical (18), Production (2), Electrical & Electronics (1), Electronics & Communication (2), Civil (1), Computer Science/IT (1) ஆகிய துறைகளுக்கு 2023/2024/2025 ஆண்டுகளில் Engineering Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Account – 2 இடங்கள்: B.Com தேர்ச்சி. Assistant-HR – 2 இடங்கள்: ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம். மாத ஊக்கத்தொகை: ₹12,300
Technician (Diploma) Apprentices – 11 இடங்கள்
Mechanical (8), Electrical & Electronics (1), ECE (1), Civil (1). 2023/2024/2025 ஆண்டுகளில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி. உதவித்தொகை: ₹10,900