சென்னையில் தொழில் நுட்ப துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. VMC Programmer மற்றும் AutoCAD Designer பணிகளுக்கு NUELEEF நிறுவனம் 20 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மாத சம்பளம் ₹25,000 முதல் ₹50,000 வரை வழங்கப்பட உள்ளது. கல்வித்தகுதி SSLC-க்கு கீழ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமாகும். வயது வரம்பு 18 முதல் 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அனுபவம் இருந்தா நல்லது
இந்த வேலைக்கு 1 முதல் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். VMC Programming, CNC Operations, AutoCAD Design, MasterCAM போன்ற தொழில்நுட்ப திறன்கள் கட்டாயம் தேவை. தினசரி உற்பத்தி செயல்முறையில் துல்லியமான கூறுகள் வடிவமைக்கும் திறன் அவசியம். இயந்திர அமைப்பு, cutting tools, G-code/M-code பற்றிய புரிதல், production drawings-ஐ சரியாக வாசித்து புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு இந்த வேலை மிகப் பொருத்தமானதாக இருக்கும்.