தமிழ்நாடு இலவச லேப்டாப் திட்டம் 2025? வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா? - பகீர் பின்னணி!

Published : Nov 24, 2025, 06:30 AM IST

TN Free Laptop Scheme தமிழக இலவச லேப்டாப் திட்டம் 2025 எனப் பரவும் செய்தி போலியானது. அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்படும். எச்சரிக்கை பதிவு.

PREV
15
TN Free Laptop Scheme பரபரப்பை ஏற்படுத்தும் வாட்ஸ்அப் தகவல்

கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் "தமிழ்நாடு இலவச மடிக்கணினி திட்டம் 2025" (Tamil Nadu Free Laptop Scheme 2025) விண்ணப்பங்கள் தொடங்கிவிட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. நிதி நெருக்கடியில் இருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி 24.11.2025 என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

25
ஆசை காட்டி மோசம் செய்யும் கும்பல்

பரவி வரும் அந்தப் போலி செய்தியில், "குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளன", "விண்ணப்பித்தவர்கள் ஏற்கனவே தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர்" என்று மக்களை அவசரப்படுத்தும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இது மக்களைச் சிந்திக்க விடாமல், உடனடியாக அந்த இணைப்பை (Link) கிளிக் செய்ய வைப்பதற்கான சைபர் குற்றவாளிகளின் தந்திரமாகும். அரசுத் தரப்பில் இருந்து இது போன்ற எந்தவொரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

35
கிளிக் செய்தால் என்ன நடக்கும்?

அந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள vunsy.xyz போன்ற மர்மமான இணையதள இணைப்பை நீங்கள் கிளிக் செய்தால், அது உங்களை ஒரு பாதுகாப்பற்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு உங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களைக் கேட்கும். இது ஒரு பிஷிங் (Phishing) முயற்சியாகும். இதன் முக்கிய நோக்கமே பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைத் திருடுவதுதான்.

45
தகவல்கள் திருடப்படும் அபாயம்

நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்யும் போதே, உங்கள் கூகுள் கணக்கின் (Google Account) சுய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கும். அதுமட்டுமின்றி, உங்கள் மொபைலில் உள்ள 'Contact List' எனப்படும் எண்கள் அனைத்தும் திருடப்பட்டு, மூன்றாம் நபர்களுக்கு விற்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் மோசடி மெசேஜ்கள் தொடர்ந்து வரக்கூடும்.

55
எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

பொதுமக்கள் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அரசு அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும், அவை செய்தித் தாள்களிலோ அல்லது tn.gov.in போன்ற அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்களிலோ மட்டுமே வெளியிடப்படும். எனவே, இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். தெரியாமல் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories