இந்த ANM/VHN பணியிடங்களுக்கு +2 தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இரண்டு ஆண்டு கால MPHW (Female) அல்லது Auxiliary Nurse Midwifery (ANM) பயிற்சி பெற்றிருக்க வேண்டும். Tamil Nadu Nurses and Midwives Council வழங்கிய பதிவு சான்றிதழும் கட்டாயம். முகாம்களில் பணியாற்ற உடல் தகுதி இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது வரம்பில் OC விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 42 வயது வரை தகுதி உள்ளது. ஆனால் SC, ST, BC, MBC போன்ற ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
சம்பளம் இதுதான்
முன்னாள் ராணுவத்தினருக்கு (Ex-Servicemen) தனிப்பட்ட வயது சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கான சம்பளம் Level-8 : ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். தேர்வு முறை எந்தத் தேர்வும் இல்லாமல், விண்ணப்பதாரர்களின் கல்வி மதிப்பெண்களை அடிப்படையாக கொண்ட Merit List மற்றும் ஆவண சரிபார்ப்பின் மூலம் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் SC, ST, SCA, DAP (PH), DW ஆகியோருக்கு ரூ.300 ஆகவும், பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2 ஆயிரம் பேருக்கு மேல் வேலை
மொத்தம் 2147 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதார சேவைக்கு இது ஒரு பெரிய பணியாளர் சேர்க்கையாக அமைகிறது. அரசு மருத்துவத்துறையில் பணிபுரிந்து மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய விரும்பும் அனைத்து தகுதியான பெண்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிக்க தவறாதீர்கள்; MRB பற்றிய அடுத்தடுத்த புதுப்பிப்புகளைக் கண்டறிவதற்காக அதிகாரப்பூர்வ தளத்தை தொடர்ந்து பார்வையிடுவது பயன்படும்.