ஒரே நாளில் 10,000 பேருக்கு வேலை.! சொந்த ஊரிலே சூப்பர் சான்ஸ்- சந்தோஷத்தில் குதிக்கும் இளைஞர்கள்

Published : Sep 18, 2025, 10:24 AM IST

Private sector employment camp : மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற சனிக்கிழமை (20.09.2025) அன்று  நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று, 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. 

PREV
14
தமிழகத்தில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க தமிழக அரசு அழைப்பு விடுத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. 

அதுவும் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

24
பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது.

நாள் : 20.09.2025 சனிக்கிழமை

நேரம் : காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை

இடம்

:சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, துறையூர் ரோடு, பெரம்பலூர்.

அனுமதி இலவசம்

34
10ஆயிரம் காலிப்பணியிடம்

சிறப்பு அம்சங்கள்

100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள்.

10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்.

தேர்வு செய்தவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணை.

சுய தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டடல்

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்.

தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கான வழிகாட்டுதல்கள்.

44
தகுதிகள் என்ன.?

வயது வரம்பு:

18-40 வயதிற்குட்பட்டோர் முகாமில் கலந்து கொள்ளலாம்.

கல்வித்தகுதிகள்

8ம் வகுப்பு முதல் முதல் ITI, Diploma, பட்டப்படிப்பு வரை (Any Degree) பொறியியல் படிப்புகள் (B.E.,B.Tech) Hotel Management & Nursing

மேலும் விவரங்களுக்கு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் பெரம்பலூர்.

Read more Photos on
click me!

Recommended Stories