நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு மற்றும் ஒரு வருட வங்கிப் பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், இதில் தமிழ்நாட்டில் மட்டும் 85 காலியிடங்கள் உள்ளன.
நாடு முழுவதும் வங்கி வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஒரு சிறந்த வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. லோக்கல் பேங்க் ஆபிசர் எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு மொத்தம் 750 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பணியிடங்கள் மாநில வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு தமிழ் மொழித்திறன் கட்டாயமாகும்.
24
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.!
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன், வணிக வங்கி அல்லது கிராமப்புற பிராந்திய வங்கிகளில் கிளார்க் அல்லது அதிகாரி பதவியில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். பொதுத்துறை வங்கி என்பதால், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பல்வேறு சலுகைகள், அலவன்ஸ்கள் மற்றும் பாதுகாப்பான தொழில்வாய்ப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
34
சம்பளத்தை கேட்ட மகிழ்ச்சியில் மயக்கமே வரும்.!
இந்தப் பதவிக்கான சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்பட உள்ளது. தேர்வு முறையில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை இடம்பெறும். தமிழக விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு மையங்கள் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், நாகர்கோவில் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகின்றன. வயது வரம்பு 20 முதல் 30 வரை இருக்க வேண்டும். ஆனால் அரசு விதிகளின் படி SC/ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பக் கட்டணம் SC/ST/PWD/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.590, மற்ற அனைவருக்கும் ரூ.1180 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 23 என்பதால் நேரம் இழக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். தேர்வு டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026 மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.